பிரபஞ்சத்தின் தோற்றம், விரிவாக்கம், அறியப்படாத ஆற்றல், அறியப்படாத பொருள் என ஒட்டுமொத்த பிரபஞ்சம் பற்றிய சித்திரத்தை இந்தப் புத்தகம் தீட்டுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றில் இருந்து ஆசிரியர் பல சுலோகங்களையும் பத்திகளையும் நவீன அறிவியல் கருத்துகளோடு பொருத்திப் பார்த்து மேற்கோள்காட்டியிருக்கிறார். மேற்குலகமும் கிழக்குலகமும் வான் வெளியில் மேற்கொண்ட விரிவான பயணத்தை சுவாரசியமான நடையில் விவரிக்கிறார். விரிவுரையாளர், முது நிலை பேராசிரியர், பிரின்சிபல், துணை வேந்தர் என பல பதவிகளைப் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வகித்திருக்-கிறார். அண்டவியல், வான் இயற்பியல் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அறிவியல் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். கோழிக்கோடு பல்கலை வளாகத்தில் வானியல் ஆய்வரங்கம் அமைப்பதிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகத்திலும் கட்டாய சமூக சேவையை பாடத்திட்டத்தின் ஒர் அங்கமாகக் கொண்டு வந்ததிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். என்.ஏ.பி.சி.யின் சேர்மன் என்ற வகையில் தேசம் முழுவதிலும் இருக்கும் கல்லூரிகளுக்குச் சென்றுவந்திருக்கிறார். அனைத்து கேரள வானசாஸ்திர கழகத்தின் தலைவராக இருந்துவருகிறார். அரசியல், சமூக, கல்வி நிறுவனங்கள் பலவற்றில் அங்கம் வகித்திருக்கிறார். மலையாளத்தில் வெளியான மஹா பிரபஞ்சம் நூல் அமோக வரவேற்றைப் பெற்றிருக்கிறது.
Be the first to rate this book.