“தமிழில் வரலாறு வாசிக்க ஒரு சிறுவனோ சிறுமியோ விரும்பினால் பாடப்புத்தகத்தை தவிர வேறு எந்தப் புத்தகமுமே இல்லை எனும் ஒரு நிலை இருந்தது.இன்று பாரதி புத்தகலாயம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நூல் மூலம் அந்த பெரிய குறையை சீர்செய்திருக்கிறது.வரலாறு சொல்லித்தருகிறேன் என குழந்தைகளுக்காக சிறுவர் மலர் போடும் தினசரி பத்திரிகைகள் கிருஷ்ணர் ராமர் படக்கதைகளை வெளியிடுகின்றன.சிறுவர்கள் அதை சீண்டுவது கூட கிடையாது.ஆனால் ஆத்மா ரவியின் மகா அலெக்ஸாண்டரை கட்டாயம் சிறுவர்கள் பார்த்தவுடன் கையிலெடுப்பார்கள்.கிருஸ்துவுக்கு முன்று நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த அந்த ஏதென்ஸ் நகர சாதாரணன் மன்னன் பிலிப்பின் மகன்.அரிஸ்டாட்டிலின் மாணவன் எப்படி உலகை ஆக்கிரமிக்கும் வெறிபெற்று உத்வேகத்தோடு படைதிரட்டி அதில் வெற்றியும் பெற்றான் என்பதை ஒரு கதைபோல தோளில் கைபோட்டுக் கொண்டு சிறுவர்களுக்கு சொல்லிச் செல்கிறார் ரவி.தந்தை பிலிப் இந்தியாவை ஆள விரும்புகிறார் தனையன் அலெக்ஸ் உலகையே ஆள விரும்புகிறார்.அலெக்ஸாண்டரின் போர்தந்திரங்கள்…நமது வரலாறு பாடபுத்தகத்தில் இடம் பெறாத அவனது மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை புத்தகம் கவனமுடன் பதிவு செய்கிறது.ஒரு வரலாற்றுப் புத்தகத்தின் கடமை அதை விட வேறொன்றும் இல்லை.மாமன்னர்கள் என்போர் வெறும் மனிதர்கள்தான்.சாதாரண மனநிலையும் பலவீனங்களும் அவர்களுக்கும் உண்டு.தவறுகளும் ஏமாற்றங்களும் அவர்களுக்கும் நடக்கின்றன அவர்களை மகா ஆக்கியது மக்களே என்பதையும் வரலாற்றை தனிமனிதர்கள் நடத்துகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள இதுபோன்ற நிறைய முயற்சிகள் தமிழில் தேவை.”
Be the first to rate this book.