ஒரு பள்ளி மாணவி எப்படி வனத்துறை அதிகாரியாக மாறுகிறாள் என்பதைச் சொல்லும் கதை. இளம் வயதில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த கெம்பா என்ற பழங்குடிப் பெண்ணுடன் அவர்களின் சொந்த ஊரான கடம்பூருக்குச் சென்று வந்த அனுபவத்தினை “நான் கண்ட கடம்பூர் ” என்ற கட்டுரையில் எழுதி முதல் பரிசு பெற, அதுவே வனத்தின் மீதும், அந்த ஆதிக்குடி மக்கள் மீதும் அளவு கடந்த அன்பாக மாறி, அவர்களைப் பாதுகாக்கும் வனத்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தை உருவாக்குகிறது. கதையை வாசிக்கும்போது, மகிழினியின் கூடவே நாமும் வனத்தில் பயணிக்கிறோம். காட்டுப்பூவரசு மரத்தை அணைத்துக் கொள்கிறாள். சிவந்திருக்கும் கள்ளிப்பழத்தைப் பிளந்து சாப்பிடுகிறாள். காட்டுப்பன்றி,மான் கூட்டங்களைப் பார்த்து ரசிக்கிறாள். தனித்து வந்த யானையைத் தொந்தரவு செய்யும் மனிதர்களை வெறுக்கிறாள். வனப்பகுதியில் வசிக்கு ம் பழங்குடி மக்களின் கோரைப்புற்களால் வேயப்பட்ட வட்ட வடிவ வீடுகளை சர்மிளா வர்ணிக்கும் காட்சி அபாரமானது. அந்த மனிதர்களின் எளிய வாழ்க்கையைச் சொல்லிச்செல்லும் விதம் அழகு.
Be the first to rate this book.