மக்ஸீம் கார்க்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ், ஃப்யோதர் தஸ்த்தயோவ்ஸ்கி, நிக்கலாய் கோகல், வேரா பானோவா, அலெக்சாந்தர் பூஷ்கின் வரிசையில் உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் அலெக்சாந்தர் குப்ரின். இவர் படைத்த இலக்கியங்கள் இன்னமும் ஜீலித்துக் கொண்டிருக்கின்றன. அலெக்சாந்தர் குப்ரின் 1270 ல், ரஷ்யாவில் உள்ள நரோவ்சாத் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். பணிவுமிக்க அலுவலரான அவருடைய தந்தை, குப்ரின் ஒரு வயது, பையனாக இருந்த போதே காலமானதால் விரைவிலேயே அவரது குடும்பம் மாஸ்கோவுக்கு இடம் பெயர்ந்தது. குப்ரினுடைய ஏழாவது வயதில், அவரை அநாதைகள் பள்ளிக்கு அனுப்ப வேண்டுய கட்டாயத்திற்கு அவரது தாய் ஆளானாள்...
Be the first to rate this book.