* சிறந்த கவிதை நூல் விருது: 2017 - 2018 @ தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம்
* சிறந்த கவிதை நூல் விருது - 2017 @ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் - செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு)
''லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் !''
..................................................
நீங்கள் பாத்துக்கொண்டிருக்கும் நீலப்படத்தில்
சன்னமாக எரியும் குண்டு பல்பு நான்
சகிக்க முடியாத சாரயக்கடையின் கனத்த கூரையை
தாங்கிக்கொண்டிருக்கும் தோலுரிந்த சவுக்குமரம் என் தந்தை
பிரியாணிப்பொட்டலம் சுற்றிய நாளிதழில்
கைப்பை திருடர்கள் பற்றிய செய்திக்குள்
மூச்சிரைக்க ஓடும் நிழல் அம்மாவுடையது
பேருந்துகளில் விற்கப்படும் அகர வரிசைப் புத்தகத்தில்
ஆப்பிளுக்கு அருகிலிருக்கும் அழகியபூனை என் தங்கை
நீங்கள் நினைப்பதுபோல் அல்ல
இது மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தின் கதைதான்
இதமான பனிப்பொழிவோடு டிசம்பர் பிறந்தது
இளஞ்சிவப்பு நிற கிருஸ்துமஸ் நட்சத்திரத்தை
சவுக்குமரத்தின் நெற்றியில் கட்டினார்கள்
கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்
அதற்குள் பலமாக சிரித்துக்கொண்டிருக்கும் குண்டுபல்பு
என்னைப் போலவே இல்லை?
பூனைக்குட்டியின் விரல்பற்றியபடி
கேக் வாங்கிக்கொண்டிருக்கும் அந்த அம்மா
கடைக்காரரிடம் அப்படி என்னதான் எழுதச் சொல்கிறாள் அதில்?
‘லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் !’
எனக்காக மூன்று முறை அதை உரக்கச் சொல்லுங்களேன்..
Be the first to rate this book.