கடமை என்றால் கைக்கு எட்டிய பணியில் சிதறாத முழுகவனத்தை செலுத்துவதாகும். குவிந்த மனநிலையில் செயல்படுவது ஆகும். திறமையாக, துல்லியமாக, முழுமையாக தேவையானதை செய்வதாகும். ஒவ்வொரு மனிதனது கடமையும் மற்ற மனிதனது கடமையில் இருந்து வேறு படுகின்றன. ஒருவன் தன் கடமையை முழுமையாக அறிந்தவனாக இருக்க வேண்டும், மற்றவனது கடமையை அறியும் முன், மற்றவன் தன் கடமையை குறித்து அறிந்ததைவிட தான் தன் கடமையை அதிகம் அறிந்தவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரது கடமையும் வேறுபடுகின்றன. அவற்றின் அடிப்படை ஒன்று தான். கடமையின் கட்டளைகளை நிறைவேற்ற காத்திருப்பவர்கள் யார்?
Be the first to rate this book.