பொதுவாகப் பெரியோர்களை “மகராசன்” என்று வாஞ்சை கலந்த மரியாதையுடன் அழைப்பதுண்டு; அண்ணல் அம்பேத்கரும் மகராசனே! இதையும் தாண்டி, “மகர்” என்றழைக்கப்படும் தலித் மக்களின் இராசன் அவர் - எனவே அவர் “மக(ர்)ராசன்!”
வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால், இப்புத்தகத் தலைப்பில் குறையிருப்பதைக் காணமுடியும் - அண்ணல் அம்பேத்கர் மகர்களுக்கு மட்டுமா இராசன்? சமூகநீதியையும், சமத்துவத்தையும் கண்ணெனப் போற்றி அவற்றைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் அல்லவா அவர் இராசன்!
அண்ணல் அம்பேத்கருக்கும், கார்ல் மார்க்சுக்கும் ஒருவிதத்தில் ஒற்றுமையுண்டு- நாட்டில் அனேகருக்கு இவ்விருவரைப் பற்றித் தெரிந்திருக்கும்; அவர்களில் சிலருக்கு இவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்கும்; அவர்களுள் சிலருக்கு இவர்கள் கூறிச்சென்ற கருத்துகள், அறிவுரைகள் தெரிந்திருக்கும்; அவர்களில் வெகுசிலரே இவ்விருவர் காட்டிய வழியில் பயணிப்பர்!
- S. நடராஜன்
Be the first to rate this book.