மதுரை நாயக்கர்களின் வரலாறை விரிவாகப் பேசும் ஆய்வு நூல் இது. விஜயநகரப் பேரரசின் வரலாற்றையும், தொலைதூரத்திலிருந்து அது செயல்படுத்திய அரசப் பிரதிநிதித்துவத்தையும் இணைத்துப் பேசும் ஒரு முயற்சியை இந்த ஆய்வு நூல் செய்கிறது.
இந்நூலில் மதுரையை ஆட்சிசெய்த ஒவ்வொரு நாயக்க மன்னரைப் பற்றிய குறிப்பும் தனித்தனியாக இடம்பெற்றிருக்கின்றன.
அத்துடன், நாயக்கர் ஆட்சியின் சிறப்பம்சங்களும் தனிக் கட்டுரையாக இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்துடன், மதுரையில் நாயக்கர் ஆட்சிக் காலகட்டத்தில் நடைபெற்ற சமயப் பரப்புப் பணிகளைப் பற்றிய விரிவான குறிப்புகளையும் இந்நூல் அலசுகிறது.
Be the first to rate this book.