சந்தை என்பதே மனிதர்கள் சந்தித்து கலந்து பழகும் இடமாக விளங்கும் பொழுது அங்கு இஸ்லாமிய நெறிமுறைகளை அமுல்படுத்துகின்ற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இத்தகைய தன்மை சந்தைக்கு (மார்க்கெட்டிற்கு) இருப்பதால் தான் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்ட பிறகு அரசியல் சுதந்திரத்திற்கும் இஸ்லாமிய அரசின் நிலையான தன்மைக்கும் பொருளாதார வலிமையும், சுதந்திரமும் மிக முக்கியமானவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். யூத வணிகர்களின் முழு ஆதிக்கத்திலிருந்த சந்தை வணிகத்தை தடுப்பதன் மூலமே இதை நிறைவேற்ற முடியுமென்று தீர்மானித்தார்கள். அதை செயற்படுத்தும் விதமாக ஒரு மாற்று வணிகத்தளத்தை உருவாக்கினார்கள். புதிய சந்தையைத் தொடங்கும்போது மக்களுக்கு இது அவர்களின் சொந்த சந்தை, யாருடைய ஒடுக்குதலும் இருக்காது, அவர்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் காட்டப்படாது, எந்த அடக்குமுறை வரியும் விதிக்கப்படாது என்பவற்றைத் தெளிவாக அறிவித்தார்கள்.
அதன் அடிப்படையில் வணிகர்களுக்கான வசதிகள் செய்து தரப்பட்டன. சந்தையின் நிர்வாகம் ஒழுங்குபடுத்தப்பட்டது. அநீதி நடைபெறாமல் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்படி இஸ்லாமிய அடிப்படையிலான சந்தை செயற்பட ஆரம்பித்த பிறகு மாறுதல்கள் ஏற்பட்டன. இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக மதீனா மார்க்கெட் அமைந்தது.
மதீனா மார்க்கெட், பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எந்தளவுக்கு முக்கியத்துவத்தையும் சிறப்பையும் பெற்றிருந்தது என்பதை உணர்த்துவதுடன் இன்று அவை பற்றிய செய்திகள் புறக்கணிக்கப்பட்ட அம்சமாகவும் திகழ்கிறது என்பதை நினைவூட்டும் விதமாக நூலாசிரியர் அவர்கள் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
Be the first to rate this book.