இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு. மத்யமர். இந்த மத்யமர்களை கதாபாத்திரங்களாக்கி சுஜாதா கல்கியில் எழுதிய சிறுகதைகள் மிகுந்த விமரிசனத்துக்கு உள்ளாகி அதே அளவு பாராட்டுகளையும் குவித்தன. வாசகர்கள் கொண்டாடிய அந்தப் பன்னிரண்டு மத்யமர் கதைகள் இப்புத்தகத்தில்.
Be the first to rate this book.