இந்திய தாய்க்கும், ஐரோப்பிய தந்தைக்கும் பிறந்தவர் மதாம். பிரெஞ்சிந்திய கம்பெனியின் கவர்னராக 12 ஆண்டுகள் ஆட்சிசெய்த துயூப்ளேவின் மனைவி. பிரெஞ்சிந்தியாவின் நிழல் ஆட்சியாளராகக் கோலோச்சியவர்.
மதாம் செய்த லஞ்ச லாவண்யங்களாலும், ஏசுசபை பாதிரிகளோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட மதநடவடிக்கைளாலும் இந்தியா முழுவதையும் பிரெஞ்சுக்காரர்கள் ஆளும் வாய்ப்பு பறிபோனது. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களாக மாறியதற்கு மதாம் ஒருவிதத்தில் காரணமானார்.
துயூப்ளே கவர்னராகப் பதவியேற்க கப்பலில் வந்திறங்கியதில் தொடங்கி, பதவி பறிபோய், குற்றவாளியாகப் பிரான்சுக்குக் கப்பலில் ஏற்றப்படும் வரையிலான காலத்தை நாவலாக்கியிருக்கிறார் டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப.
Be the first to rate this book.