வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரான கவிப்பித்தன் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த மக்களின் மண் சார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும் தொடர்ந்து எழுதி வருபவர். மக்களாட்சியின் ஒரு அங்கமாக சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தல்களில் உண்மையான முகத்தை அதன் ஒப்பனைகளையெல்லாம் கலைத்துவிட்டு அசலாக இந்த நாவலில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். ‘மடவளிகள்‘ எனப்படும் வண்ணார், நாவிதர்களின் வாழ்வியலையும், சமூகத்தின் எந்த நிகழ்வானாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறெல்லாம் நசுக்கப்படுகிறார்கள் என்பதையும் தேர்தலின் பின்புலத்தோடு சொல்கிற முதல் நாவலாக ‘மடவளி‘ உள்ளது.
5 உள்ளது உள்ளபடி
Anandan Gunasekaran 02-01-2019 10:40 pm