அன்றாடத்தின் அவசரங்களில் சாதாரணமானது எனக் கவனியாமல் நாம் கடந்து செல்லும் சிறிய தருணங்களில் ஒளிந்திருக்கும் விநோதமான அழகுகளை வியப்புடன் காண நம்மை இழுத்துப் பிடித்து நிறுத்தும் தன்மை கொண்டவை மதாரின் கவிதைகள். தர்க்கங்களின் சுமை அவ்வளவாக ஏற்றப்படாத எளிமையான வரிகளில் குழந்தைகளின் வேடிக்கையும் விளையாட்டும் கலந்ததொரு மனோபாவம் அவ்வப்போது வெளிப்படுகிறது.சொற்களின் சேர்க்கையையும் அவற்றின் உத்தேசமான அர்த்த பாவனைகளையும் மீறியதொரு மலர்ச்சியையும் நறுமணத்தையும் இக் கவிதைகள் நெடுகிலும் பல சந்தர்ப்பங்களில் நம்மால் உணரமுடிகிறது. அதை மொழி நடையிலோ, பொருள் கொள்ளும் வகையிலோ தீவிரமான முனைப்புகள் ஏதுமின்றியே வெகு இலகுவாகவும் இயல்பாகவும் இவரால் சாதிக்க முடிந்திருக்கிறது என்பதே இவரது தனித்துவம் எனலாம்.
க. மோகனரங்கன்
Be the first to rate this book.