விகடனின் சிறந்த சிறார் இலக்கியம் விருது பெற்ற நூல்.
‘ஒரு ஊர்ல ஒரு ராஜா...’ என ஆரம்பிக்கும் எளிய நீதிக்கதைகள்தான். ஆனால், வித்தியாசமான கற்பனைகளால், சிறார்களை பல புதிய அனுபவங்களுக்கு அழைத்துச் செல்கின்றன இந்தத் தொகுப்புக் கதைகள். பெரும்பாலான கதைகளின் மையப்பாத்திரம் ராஜாதான். ஆனால், அவை ராஜாவைப் பற்றி பெருமை பேசுபவை அல்ல. அவரின் அதிகாரத்தைக் கேலிசெய்பவை. சிறார்களுக்குப் புரியும் வார்த்தைகளில் எளிய கதைகளாகச் சொல்லும் உதயசங்கர், தனது சுவாரஸ்யமான சொல்முறையால் பெரியோர்களையும் ஈர்க்கிறார். சிறார்களின் மனதில் அவர்களும் அறியாதவாறு அதிகாரத்துக்கு எதிரான விமர்சனத்தை உருவாக்க முயலும் இந்த `மாயக்கண்ணாடி’, சமூகத்துக்குத் தேவையான தற்கால அவசியம்!
Be the first to rate this book.