இந்தியஅமெரிக்க வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அமர்நாத்தைப் போல சிறப்பாக உள்வாங்கி வெளிப்படுத்திய தமிழ் எழுத்தாளர் இல்லை. ‘மாயபிம்பம்’ என்கிற இந்த நாவல் அவ்வகையில் தனித்தன்மையானது. தன் மதத்தை, பழக்க வழக்க ஒழுங்குகளை, கலாச்சாரத்தை வலிந்து உயர்த்திப் பிடிக்காத பாவனையோடு, எல்லா மதங்கள் சார்ந்தும் ஓர் உயரிய தளத்தில் அசைபோடுதல், கூடவே மதம் மற்றும் அறிவியல் இடையிலான காலம்காலமான விவாதத்தை முன்னெடுத்தல் என ஓர் பரந்து விரிந்த தளத்தில் இயங்குகிறது. ஆங்கிலத்தில் பெஸ்ட் செல்லரை வாசிக்கிற விறுவிறுப்புடன் இதோ ஒரு தமிழ் நாவல்.
Be the first to rate this book.