குழந்தைகளுக்குப் பிடித்த வரிக்குதிரை கதையே முதல்கதையாக உள்ளது. கொடிய விலங்குகளிடையே தம் கூட்டத்தைப் பாதுகாக்கும் மங்கை என்னும் பெயருடைய வரிக் குதிரையின் புத்திக்கூர்மையை இக்கதை பேசுகிறது.
ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி இருக்கும் மாயாவிகளின் கதைகள், 70,80களில் பிறந்தவர்களுக்கு அத்துப்படியான கதைகள். அதே சாயலில் உள்ள ஒரு கதையே ‘ஒத்தைமுடிக்காரி’. உதவும் குணத்தால் வழியில் சந்திக்கும் விலங்கு, பறவை, மனிதர்களின் அன்பைப் பெறுகிறாள்.
படிக்கும் குழந்தைகளின் உள்ளத்தில் நற்பண்பால் ஏற்படும் நன்மையை விதைத்துச் செல்வாள்.
புத்தகத்தின் தலைப்பாக இருக்கும் ‘மாயாவியின் திமிர்’ என்ற கதை, வண்ணங்கள் நிறைந்த, அழகான , பெரிய ஒரு பட்டாம்பூச்சியைப் பற்றியது. அழகும் கர்வமும் அந்தப் பட்டாம்பூச்சியை என்ன பாடுபடுத்துகிறது என்பதே இக்கதையின் மைய இழை. பூச்சிகளை உண்டு வாழும் நெப்பந்தஸ் என்னும் பூவைப் பற்றிய தகவலையும் இக்கதை கூறுகிறது. இவ்வாறு சில அறிவியல் செய்திகளையும் ஆங்காங்கே சொல்லிச் செல்ல தவறவில்லை ஆசிரியர் மோ.கணேசன்.
Be the first to rate this book.