உச்சிவானில் எரிவிண்மீன்கள் அடுத்தடுத்து எரிந்து விழுந்தன. குடைச்சீத்தைகளுக்குள் மணிப்புறாக்களும் தவிட்டுப் புறாக்களும் அகாலத்தில் குரலிட்டு அடங்கின. எங்கும் அச்சுறுத்தும் அமைதி சூழ்ந்தது. கோட்டைமாரியம்மன் கோவில்வெளி சூன்யத்தில் மூழ்கியிருப்பது போல் பட்டது. வெளிமதில் நடைக்கல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த நான் திரும்பி உள்ளே பார்த்தேன். கம்பிக் கதவுக்குள் சுடர்ந்து எரிந்த அகல் சட்டென அணைந்தது. இருளில் திடீரென விசித்திர ஒலிகள் எழத் தொடங்கின. என் கண்கள் உன்னித்து நோக்கின.
-
நாவலிலிருந்து...
Be the first to rate this book.