நாகலட்சுமி சண்முகம்
நாகலட்சுமி சண்முகம் ஒரு தலைசிறந்த பேச்சாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். கடந்த பத்து ஆண்டுகளில் 95 நூல்கள் இவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. இவருடைய மொழிபெயர்ப்புகளுக்குக் கிடைத்துள்ள சில அங்கீகாரங்களில், ‘சேப்பியன்ஸ் – மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ நூலுக்காகத் திருப்பூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய விருதும், ‘இறுதிச் சொற்பொழிவு’ நூலுக்காக ‘நல்லி திசையெட்டும் விருதும்’, தமிழக அரசு வழங்கிய ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ விருதும் அடங்கும்.
தம்பதியருக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கு இவர் எழுதிய ‘மகிழ்ச்சியான மணவாழ்க்கை – மறந்து போன ரகசியங்கள்’ என்ற நூல் இவருடைய முதல் சுயபடைப்பாகும்.
தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான திரு முத்துசாமி அவர்களின் பேத்திகளில் ஒருவர் இவர். இவருடைய கணவர் திரு PSV குமாரசாமியும் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நாகலட்சுமியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், அவரை மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளவும் www.NagalakshmiShanmugam.com என்ற அவருடைய வலைத்தளத்தை அணுகலாம்.
Be the first to rate this book.