குழந்தைகளுக்குக் கடினமான விஷயத்தை எளிதில் புரிய வைக்க சிறந்த வழி சித்திரக் கதைளே. அறிவியல் புனைவு கதைகள், வரலாற்றுக் கதைகள், மாயாஜாலக் கதைகள், துப்பறியும் கதைகள், பொழுதுபோக்குக் கதைகள் எனத் தமிழில் வராத சித்திரக் கதைகளே இல்லை. சித்திரக் கதைப் புத்தகங்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு சென்ற தலைமுறைவரை அத்தனை பிணைப்பாக இருந்தது.
ஆனால், சித்திரக் கதைகளின் வருகை இப்போது குறைந்துவிட்டது. குழந்தைகளுக்கு முதல் புத்தகமாகப் பாடப் புத்தகங்களே அறிமுகமாகின்றன. குழந்தைகளிடம் வாசிப்பை வளப்படுத்த வேண்டும் எனில் சித்திரக் கதைகள் அதிகம் வர வேண்டும். அந்த முயற்சியின் தொடக்கப் புள்ளியாக ‘தி இந்து’ குழந்தைகள் இணைப்பிதழலான ‘மாயா பஜார்’ பகுதியில் ‘மாய விரோதி’ என்ற சித்திரக் கதையைத் தொடராக வெளியிட்டது.
மனித தலையுடைய வெட்டுக்கிளி உடலைப் பெற்ற சிறுவன், தன் சுய உருவத்தை அடைய ஜிம்பா என்ற விசித்திரமான பாத்திரம், உதவும் கதைதான் இது. ‘மாய விரோதி’யைத் தேடி வெவ்வேறு உலகுக்கு ஜிம்பா செல்லும்போது நிகழும் திருப்பங்களையும் மாயாஜாலங்களையும் இந்தச் சித்திரக் கதை வழியே ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாகச் சொன்னார் இந்தக் கதையின் ஆசிரியர் முத்து. அதற்கு வலு சேர்க்கும் வகையிலான ஓவியங்களுக்கும் கதைக்குள் எல்லோரையும் ஈர்த்தது.
Be the first to rate this book.