"இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஏமாற்று- வஞ்சக-துயரச்சம்பவம் ஒன்றை வரலாற்றுப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் இது.
வரலாறு என்பது வந்தியத்தேவனும் குந்தவை நாச்சியாரும் மட்டுமே அல்ல என்பதே தமிழனுக்கு கற்றுத்தரப்பட வேண்டிய விடயம்.
நாவல் முழுக்க அந்த காலகட்டத்தின் மரபு, பண்பாடு, மொழி, ரசனை,மனித உறவுகள், உணவு எனப் பரவலாகப் பேசப்பட்டுள்ளது. ஊடாக சமகாலக் குற்றங்கள் பற்றிய குறிப்புகள் அச்சம் ஏற்படுத்துகின்றன.
கதாப்பாத்திரங்கள் சில அரசியல் கட்சிகளின் பொறுக்கித்தனம், தெம்மாடித்தனம், கயமை, ஏமாற்று வஞ்சம் குறித்து உரையாடுகின்றன. அவற்றை சாதாரணமாகக் கடந்து போதல் எளிதல்ல.
வரலாற்றுப் பின்புலம் கொண்ட நாவலே ஆனாலும் சௌம்யா, எலிமா, ஹென்றி, சுப்புராவ் எனப் பல்வித ஆளுமைகள் கொண்ட கதாப்பாத்திரங்கள் சுவாரசியமானவை.
கலை வித்தகர் பலரும் மும்பையின் தாராவி என்றால் சென்னையின் ரங்கநாதன் ஸ்ட்ரீட் என எண்ணிக்கொண்டிருப்பதைப் போல, சென்னை என்றால் திருவல்லிக்கேணி, மைலாப்பூர், மாம்பலம், தியாகராய நகர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் மாய பிம்பத்தைத் தகர்க்கிறது இந்த நாவல்"
Be the first to rate this book.