எரியாத எந்தப் பொருளும் நெருப்போடு தொடர்பு கொள்ளும் போது எரிந்து விடுகிறது. அது போலவே மக்களின் அதிருப்திக்குள்ளாகும் எந்த அரசும் அழிந்துவிடுகிறது. அப்பாவிகளைத் துன்புறுத்துவதிலிருந்து பிறக்கு புரட்சிகளால் எந்த நெருப்பையும் விட ஒட்டு மொத்த சாம்ராஜ்ஜியத்தையும் எரித்துவிடும்,
- மாவீரன் சிவாஜி.
கோவிந்த பன்சாரே தமிழில்: செ.நடேசன் பாரதி புத்தகாலயம் கோவிந்த பன்சாரேவின் சிவாஜி கோன் ஹே – புத்தகம், சிவாஜி ஒரு காவித் தலைவன் அல்ல. காவியத் தலைவன் என்பதை நிறுவுகிறது. சிவாஜியின் அரசியல் அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களையும் எப்படி ஒருங்கிணைத்தது என்பது இன்றைய மாட்டிறைச்சி – படுகொலைச் சூழலில் வாசிக்கும் நமக்கு, ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான தோழர் பன்சாரேவின் சிகப்பு அரசியலையும் புரிந்து கொள்ள முடிகிறது. எளிய, கையடக்க விலை. மலிவுப் பதிப்பு இது.
Be the first to rate this book.