இந்த நூல் இரண்டு பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானதும் என்னென்ன திட்டங்களையெல்லாம் அமல்படுத்துவார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்தில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது ஆற்றிய பேருரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் எட்டு ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் அரசு செய்த தவறுகளை விரிவாகப் பட்டியலிட்டிருக்-கிறார். அந்தத் தவறுகளையெல்லாம் களைவது எப்படி? அமெரிக்காவை உலகின் தலைமைப்பீடத்தில் மீண்டும் அமர்த்துவது எப்படி? என்பது தொடர்பான தன்னுடைய நடைமுறை சாத்தியமான திட்டங்களையும் தெளிவாக முன்வைத்-திருக்கிறார்.
ஒபாமா பயன்படுத்தும் நுட்பமான, ஆழமான வார்த்தைகள் அவருடைய மொழி ஆளுமையையும் தேச பக்தியையும் மிக அழகாக இந்த நூலில் எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்காவின் தவறுகளைச் சொல்லும்போது பிழையான அமெரிக்க அரசியல் தலைவர்களின் தவறாகவே அதை முன்வைக்கிறார். அது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மாற்றத்தைச் சாதிக்கும் வலிமையை அவர்களுக்குத் தருகிறது. அதோடு நம்மைப் பிரிக்கும் அம்சங்களை விட ஒன்று சேர்க்கும் அம்சங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரவேண்டும். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாக, ஒரு தேசமாகவே இருக்க வேண்டும் என்ற விஷயத்தை அழுத்தமாக முன்வைக்கிறார்.
பல அம்சங்களில் அமெரிக்காவோடு ஒற்றுமை கொண்ட நாடு நம் இந்தியா. அமெரிக்கா போல் உலகில் தலை சிறந்த நாடாக ஆக வேண்டும் என்ற கனவும் நமக்கு இருக்கிறது. இந்த நூலில் ஒபாமா சொல்லியிருப்பவை அமெரிக்காவின் வெற்றிக்கான காரணத்தை நமக்குப் புரியவைக்கும். அதோடு நமக்கும் வெற்றிக்கான ஒரு வழியைக் காட்டும்.
Be the first to rate this book.