பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சார்ந்து நிலவும் பல்வேறு நம்பிக்கைகள் வாழ்வனுபவமாக இந்நாவலில் காட்சியாகின்றன. மேலும் குழந்தைப்பேறு தொடர்பான சமூகப் பொதுக்கருத்தியல் இதில் விவாதத்திற்கு உள்ளாகிறது. விடுதலைக்கு முந்தைய காலத்து நிகழ்வுகளை மையமிட்டு மண்மணம் ததும்பும் எளிய மொழிநடையில் பாலியல் சார்ந்து மனித மனங்களின் நுட்பங்களை ஊடுருவிச் செல்கிறது நாவல்.
Be the first to rate this book.