யுனெஸ்கோவின் உலகில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் இந்தியாவின் தோட மொழியும் உள்ளது.மேலும் தோடர்கள் படுக மற்றும் தமிழ் மொழிக்கு மாறுவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. இந்த சூழ்நிலையில் மிகவும் பழைமை வாய்ந்த தோட வாய்மொழி இலக்கியத்தை இந்த புத்தகத்தின் வாயிலாக முதல் முறையாக சாகித்திய அகாதெமியின் வாய்மொழி மற்றும் பழங்குடியின இலக்கிய மையம், இந்த புத்தகத்தின் ஆசிரியர்களின் மூலமாக ஆவணப்படுத்தி உள்ளது. இந்த புத்தகத்துடன் இணைத்துள்ள குறுந்தகட்டின் மூலம் வாசகர்கள் தோட கலாச்சாரத்தைப் பார்த்தும், மொழியைக் கேட்டும் அறியலாம்.
கே.வாசமல்லி: தோட சமுதாய ஒருங்கிணைப்பாளார், மாநில பழங்குடியின நல வாரியத்தின் ஓர் உறுப்பினர். இவர் தோட மொழி அகராதி உருவாக்கத்திலும், தோட மொழிக்கதைகள் மற்றும் பாடல்களை மொழிபெயர்ப்பதிலும் ஆர்வம் உள்ளனர்.
ரா.கார்த்திக் நாரயணன்: மொழியியல் ஆராய்ச்சியாளர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மொழியியல் ஆராய்ச்சியில் இளநிலை பட்டப் படிப்பு படித்து வருகிறார். இவரது சிறப்புப் பாடம் மொழி ஆவணப்படுத்தலும், மீள் உயிர்ப்பூட்டலும் ஆகும்.
Be the first to rate this book.