குர்ஆன் வெறுமனே தத்துவார்த்தமான நூல் கிடையாது. வாழ்ந்து பார்க்க வேண்டிய நடைமுறை நூல் ஆகும். இதன்படி வாரம்தோறும் ஒரு வசனத்தின் அடிப்படையில் வாழ முயல்வது என்கிற திட்டத்தின்படிச் செயல்படத் தொடங்கினார்கள். இவ்வாறாக வகுப்புக்கு வருபவர்கள் தங்களின் சொந்தப் பிரச்னை ஒன்றைச் சொல்ல, அவர்களுக்கு சுமைய்யா ரமளான் அவர்கள் பொருத்தமான வசனத்தைப் பரிந்துரைப்பார்.
பணி சிறியதுதான். ஆனால் விளைவோ மிகச் சிறப்பாக வெளிப்பட்டது. பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. பல்வேறு இன்னல்கள் முடிவுக்கு வந்தன. மன அமைதி, நிம்மதி எனும் மிகப்பெரிய செல்வம் கிட்டியது. குடும்பச் சண்டைகள் குறைந்தன. பிரிந்த குடும்பங்கள் இணைந்தன. கோபதாபங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைத்தது. கணவர்கள் தங்களது மனைவியரில் ஏற்பட்ட மாற்றங்களைப் பாராட்டியதுடன் அதனை மகிழ்ச்சிகரமான புரட்சி என்றும் வர்ணித்தனர்.
குர்ஆன்படி வாழ விரும்புகின்ற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய இனிய நூல்தான் “மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்”.
- டாக்டர் சுமைய்யா ரமளான்
Be the first to rate this book.