சென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதி என்று சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகளைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழில் சில சிறுகதைத் தொகுதிகள் முதன்மையான படைப்பாளிகளின் வரவை அறிவித்ததனால் இன்றும் நினைக்கப்படுபவையாக உள்ளன. சுந்தர ராமசாமியின் 'அக்கரைச்சீமையிலே' அசோகமித்திரனின் 'வாழ்விலே ஒருமுறை' வண்ணத்தாசனின் 'தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்' போன்றவை. அவ்வரிசையில் வைக்கத்தகுந்த தொகுப்பு 'மாறிலிகள்'.
- ஜெயமோகன்
சிங்கப்பூர் அரசின் உயரிய விருதான ‘சிங்கப்பூர் இலக்கியப் பரிசு’ வென்ற சிறுகதைத் தொகுப்பு
Be the first to rate this book.