மனிதனின் எண்ணங்கள்தான் இன்று அறிவியல் உலகின் பல சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தவை. எண்ணங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. ஆபத்துகளையும் தந்துள்ளது. மனிதனின் சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் எல்லை என்பதே இல்லை. அப்படி ஒரு சிந்தனையின் பின் தன் கனவுகளையும் லட்சியங்களையும் விரட்டிச் செல்லும் சில மனித முயற்சிகளின் போராட்டத்தை சுவாரசியமாய் கூறுகிறது. 'மாறா மரபு' என்ற இந்த நாவல். மரபணு ஆராய்ச்சியில் தொடங்கி யுகம் கடந்த செய்திகளைக் கூறுவது என மர்ம முடிச்சுகளைப் பின்னுவதும், அதை இயல்பாக அவிழ்த்து கதையின் மையக் கருத்தை உணர வைப்பதும் நன்று. அறிவியல் கதைகளை அவ்வளவு எளிதில் யாரும் கையில் எடுத்துவிட முடியாது. ஆனால் எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் தான் கூற வரும் கருத்தினை மிகைப்படுத்தி எடுத்துச் செல்லாமல், அதற்கு எவ்வித பாதிப்புமின்றி மிகக் கவனமாக கையாண்டிருக்கிறார்.
Be the first to rate this book.