இந்தப் புத்தகம் ரசனை சார்ந்து எழுதபட்ட ஒன்று. ஒரு வியப்பான விஷயத்தை உள்வாங்கினால் , அதை மற்றவர்களிடம் பகிர வேண்டும் என்று தோன்றும் இல்லையா! அப்படிப் பகிருவதர்காக எழுதப்பட்ட புத்தகம், இந்தப் புத்தகத்தில் மாபெரும் இயக்குநர்கள் பத்து பேர் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவர்கள் இயக்கிய படங்கள் வழியாக அவர்கள் நமக்கு சொல்ல விழைந்ததும அவர்கள் சினிமாவை எப்படி உள்வாங்கியிருக்கிறார்கள் என்பது குறித்தும் எனது பார்வையே இந்தப் புத்தகம். தாதா மிராசி, ஏ.பி நாகராஜன், எஸ். பாலசந்தர், ஏ.டி கிருஷ்ணசாமி, திருலோகசந்தர், எல்.வி பிரசாத், பீம்சிங், பி.ஆர் பந்துலு, சுந்தர் ராவ் நட்கர்ணி, எஸ்.எஸ் வாசன் என ஒரு மாபெரும் சபையினர் இயக்கியப் படங்கள் குறித்த நூல் இது.
Be the first to rate this book.