தன் பேச்சுகளும் எழுத்துகளும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்போடு களப்பணியாற்றிவரும் இன்குலாப் அவர்களின் நேர்காணல்களை இன்றைய சூழலில் தொகுத்தளிப்பது வரலாற்றுத்தேவையாக கருதுகிறோம்.
வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளியாகியிருந்தாலும் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மானுடத்தின் குரலாக பதிவாகியுள்ளன. கவிதை, போராட்டம், கொள்கை, தத்துவம் என அவர் கவனம் செலுத்துகிற எல்லாத் தளத்திலும் மானுட சமத்துவம், ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை என்பதை தன் மூச்சாகக்கொண்டிருந்தார் என்பதற்கு சான்றாக இந்நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.
Be the first to rate this book.