உழவுத்தொழில் நொடிந்த நிலையில், ஒரு பிரதேசமே கைவிடப்பட்ட சூழலில், செயற்கையான உரங்களாலும், பூச்சிக் கொல்லிகளாலும் மண்ணே மலடான தருணத்தில் - ஒரு தேவதூதர் போல தோன்றி, அந்தப் பிரதேசத்துக்கே புத்துயிர் கொடுத்த உழவர்களின் அற்புதக் கதைகளே இந்தப் புத்தகம். இந்த மண் மீதும், மனிதர்கள் மீதும் கொண்ட அக்கறையினால் இயற்கை விவசாயத்தை நம்பிக் களமிறங்கி, நின்று போராடி, பசுமையை மீட்டெடுத்து வென்ற சாதாரண மனிதர்கள் இவர்கள். தாம் இயங்கும் சமூகத்தையும் விவசாயத்தின் வழியில் கைதூக்கிவிட்ட களப்போராளிகள். நம் மண்ணில் மட்டுமல்ல. தேசங்கள்தோறும், கண்டங்கள்தோறும் அர்ப்பணிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு இயற்கை விவசாயிகளை இங்கே சந்திக்கலாம்.
Be the first to rate this book.