மாணவர் மனசு’ படித்தேன். மிக மிகப் புதிதாக இருந்தது. மொழியும் புதுமை; குழந்தையோடு குழந்தையாய் ஆசிரியர்
பெறும் அனுபவமும் புதுமை. குழந்தைகளின் மொழி, விளையாட்டு, வருத்தம் , கொண்டாட்டம் – ஒவ்வொன்றும் அருமை. குழந்தைகளின் சுதந்திரம், ஆசிரியரிடம் அவர்களுக்கு இருக்கும் உரிமை – வாசித்து வாசித்துத் திளைத்தேன். வாசித்துச் சுவைக்கத் துணையாக இருப்பது – உங்கள் மொழி. நகைச்சுவை நிறைந்த மொழி. உணர்ச்சி ததும்பும் மொழி. பெருமையும் பெருமிதமுமாய் மனதில் நிறைந்த மொழி. வேடிக்கையும் விளையாட்டும் நிரம்பிய குழந்தைகள் உலகம்தான். அதே நேரத்தில் கல்வி, அதிகாரமயமாகி வருவதையும் வேதனையோடும் விமர்சனத்தோடும் மறக்காமல்
சுட்டிக்காட்டும் தொகுப்பு இது.
Be the first to rate this book.