எண்பதுகளிலிருந்து அறியப்பட்ட எழுத்தாளரான சந்திரா இரவீந்திரன் பல சிறந்த சிறுகதைகளைத் தந்தவர். அவரது மொழிநடை தனித்துவமானது. மனதின் உணர்வுகளை அப்படியே உருவி எடுத்துத் தன் மொழியில் படையலிடுபவர். இப்போது தன் மாமியின் அனுபவங்களை, அவருக்குள் இருந்த உணர்வுகளைச் சிறிதும் குறையாமல் இங்கே பதிவுசெய்திருக்கிறார். இந்நூல் நமக்குப் புதியதொரு களத்தை விரித்துக்காட்டுகிறது. மாமியின் உணர்வுகளை நம் மனதோடு பேசவைக்கிறது. சந்திரா இரவீந்திரனின் படைப்பாற்றல் காரணமாக ‘மாமி சொன்ன கதைகள்’ அனுபவப் பகிர்வு என்பதையும் தாண்டிக் கலைத்துவம் மிக்க இலக்கியமாகியிருக்கிறது என்பதுதான் சிறப்பு!
- தாமரைச்செல்வி
Be the first to rate this book.