பா.ராகவனின் சிறுகதைகள் மிக நேர்த்தியானவை. மையப் பொருளை விட்டு விலகாமல், ஒரு வார்த்தை போலும் விரயமாகச் சொல்லப்படாமல், நேரடியாகப் பேசுபவை. சிறுகதைகளின் செறிவே அதன் வார்த்தைச் சிக்கனத்தில்தான் உள்ளது.
இத்தொகுப்பில் உள்ள கதைகள் சிறுகதைகளுக்கான இலக்கணத்தை அப்படியே அடியொற்றி வருகின்றன. அதேசமயம் உள்ளடக்கமும் மொழியும் கதைகளுக்கேற்ப மிகக் கச்சிதமாக மாற்றம் கொள்கின்றன. இயல்பாகவே கதையெங்கும் காணக் கிடைக்கும் மெல்லிய நகைச்சுவை, தன் அளவை விட்டுக் கூடிவிடாமல், கதையோடு இயைந்து வருகின்றது. இந்தப் புன்னகைக்கு இடையில் திடீரென்று நாம் எதிர்கொள்ளும் பூடகமான உச்சம் நம்மைத் திகைக்க வைக்கின்றது. அபாரமான கதைத் தருணங்களை எழுத்தால் வசப்படுத்தியிருக்கும் இக்கதைகள், நம்மை ஆக்கிரமிக்கின்றன. அசர வைக்கின்றன.
Be the first to rate this book.