ஷாராஜின் ‘துலுக்குவார்பட்டி ட்ரையாலஜி’ என்னும் மும்மை நாவல்களில் முதலாவது பெருந்தொற்று. இரண்டாவது இந்த மாதீஸ்வரி. ராணுவ ஒழுங்கு போன்ற கட்டுப்பாட்டில் ஊரை நிர்வகித்து வந்தவர், முன்னாள் ஊர்த் தலைவரான மிராசுதார் சென்ராயன். அவரது மரணத்துக்குப் பிறகு அவரின் விதவையான மாதீஸ்வரி, பிற மிராசுதார்கள், பண்ணையார்களின் எதிர்ப்புக்கிடையே ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், கல்வியறிவற்றோர், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறாள். இந்நிலையில் அவளது குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத அசம்பாவிதங்களாலும், அதன் பின்விளைவுகளாலும் குடும்பம் சிதைந்து, ஊரும் பாதிக்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் அவள் மரணப்படுக்கையில் கிடக்கும்போது, ஒரு வார காலத்தில் இன்னும் சில எதிர்பாராத சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இந்தப் பின்புலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விவகாரத்தை முன்னிட்டு மாதீஸ்வரி, அவளின் இளைய மகன், பேரன் ஆகியோருக்கிடையே நிகழும் பாசப் போராட்டம் இந்த நாவல்.
Be the first to rate this book.