கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு.வில்லன் வேடமேற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியதே ராதாவுக்குப் பிறகுதான். அவருக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரையுலகில் அவருக்கு நிகரான இன்னொரு கலைஞர் உதித்ததில்லை.
அவர் நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் எந்தத் கதாநாயகரைக் காட்டிலும் பெரும் புகழ் பெற்றவராக் இருந்தார். 'ராமாயணம்' புகழ் கொடுத்தது வாழ்மீகிக்கும் கம்பனுக்கும் மட்டுமல்ல.ராதாவுக்கும் கூட.
அந்த ஒரு நாடகத்துக்கு மட்டும் எத்தனை முறை அரசு தடையுத்தரவு பிறப்பிக்கும்! அடுதடிகளும் கல் வீச்சுகளும் சொல்வீச்சுகளும் தமிழகத்தையே குலுக்கின.எதற்கும் அசராத அவரது துணிச்சல் அபாரமானது.
திராவிடர் கழக அனுதாபியாக இருந்தாலும் பெரியாரையும் அண்ணாவையுமே விமிரிசிப்பார். காங்கிரஸ்காரர்களைப் பிடிக்காதென்றாலும் காமராஜரை மதிப்பார். தீவிர நாத்திகரானபோதிலும் பக்திப் படங்களில் எவ்வித மனச் சிடுக்குமின்றி நடிப்பார்.எளிதில் பிடிபடாத குணச்சித்திரம்!
இந்நூல் எம்.ஆர். ராதாவின் முழுமையான வாழ்க்கை வரலாறல்ல. ஒரு காட்டாற்று வெள்ளத்தை கப் அண்ட் சாஸரில் ஏந்திக்குடிக்கிற முயற்சி மட்டுமே.
Be the first to rate this book.