ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில சம்பவங்களை ஆதாரபூர்வமாக அணுகுவதற்கான குறைந்தபட்ச சாத்தியங்களையோ கொண்டிருப்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் எம்.ஆர்.ராதாவை வாசிப்பது என்பது, தமிழ் நாட்டின் அரைநூற்றாண்டுகால அரசியல் வரலாறாகவும், அரசியல் மாற்றங்களின் சாட்சியங்களாகவும் இருக்கிறது. இதுதான் திரைக்கலைஞன், மேடைக்கலைஞன் என்பதிலிருந்து அவரை மக்கள் கலைஞனாக தனித்துவமாக்கிக் காட்டுகிறது. மூடப் பழக்கங்கங்களால் மூழ்கிக் கிடந்த மக்களை மீட்க, தான் சார்ந்த கலையையே ஒரு ஆயுதமாகவும், நாடகக் கொட்டகைகளையே போராட்டக்களமாகவும் மாற்றிக்கொண்டவர் எம்.ஆர்.ராதா. பத்திரிகையாளர் மணாவின் எழுத்தாக்கத்தில் இந்நூல் முழுக்க அப்படிப்பட்ட ஒரு சமூகப் போராட்டக் களத்தையும், அதில் ஒரு கலைஞனின் பங்களிப்பையும் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.