தமிழ்நாட்டின் முதல் தலித் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.ராஜாவின் விரிவான வாழ்க்கை வரலாறு – தமிழில் முதன்முறையாக!
‘எம்.சி.ராஜா – மறைக்கப்பட்ட மாபெரும் ஆளுமை’ என்னும் இந்தப் புத்தகம், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வு ஒன்றையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஓர் ஒப்பற்ற தலைவனின் வாழ்வியல் சாசனம்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பல்வேறு அரசுப் பொறுப்புகளில் பதவி வகித்த எம்.சி.ராஜா, தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்டு, எவ்வாறு அதற்கான அரசியல் சட்டங்களை வகுப்பதில் வெற்றிகண்டார் என்பது தெள்ளத் தெளிவாக இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
எம்.சி.ராஜா என்னும் உண்மைத் தலைவரின் பல்வேறு பரிணாமங்கள் வரலாற்றுத் தரவுகளோடு இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
எம்.சி.ராஜா மீதான அத்தனை அவதூறுகளுக்கும் வரலாற்றுச் சான்றுகளின் மூலம் பதிலளித்து அவற்றின் பொய் முகத்தைக் கிழித்து எறிந்திருக்கிறார் ஆசிரியர் ம.வெங்கடேசன்.
தமிழகத்தின் சமத்துவ சமுதாய அரசியல் வரலாற்றைப் பேசும் இந்த நூல், மிக முக்கியமான ஆவணம்.
இந்த நூலில், எம்.சி.ராஜாவ்இன் ஆக்கங்களும் தொகுக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
Be the first to rate this book.