மனித இனங்கள் படிப்படியாக எவ்வாறு பரிணாமம் பெற்றது என்பதை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்வது உலகைப் பற்றி பரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இந்த உலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மதமும், சமூகமும் தங்களுடைய நம்பிக்கைகளையும், கடவுள் உலகைப் படைத்தக் கதைகளையும் உண்மையென்று கருதி இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் உயிர்கள் பரிணாமம் பெற்று வளர்ந்து வந்ததைக் கூட மதங்கள் சொல்லப்பட்ட விசயமாக தற்பொழுது பார்க்கப்படுகின்ற ஒரு போக்காகவும் மாறியிருக்கிறது.
சி.ராமலிங்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் களசெயல்பாட்டாளராக செயல்பட்டு வருபவர். பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். அறிவியல் கட்டுரைகள், கதைகள், கவிதைககளை துளிர் அறிவியல் மாத இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். அறிவியல் – பல இலக்கிய வடிவங்களில் வரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். ஒரு விஞ்ஞானியாக தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருபவர்.
Be the first to rate this book.