'ஆட்டோசந்திரன்' அவர்கள் எழுதிய 'லாக்கப்' நூலின் சிறை அனுபவங்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் 'விசாரணை' திரைப்படமாக எடுக்கப்பட்டு, இத்தாலி நாட்டின் 72 வது வெனிஸ் உலக சினிமா விழாவில் சிறந்த சினிமாவுக்கான 'மனித உரிமை விருது' வென்றது.
நிராதரவான லாக்கப் கைதிகளின் துயர் என்பது பரந்துபட்ட சமூகத்தின் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறது. விளிம்புநிலை மக்கள் குறித்த அக்கறையும் தலித் மக்களின் மீதான உடல் உள வன்முறை குறித்த எழுத்துக்களும் தமிழில் அதிகரித்து வரும் சூழலில் மு.சந்திரகுமாரின் லாக்கப் சிறைக் குறிப்புகள் வருகிறது என்பது மிகப் பொருத்தமானதாகும். "லாக்கப்" இந்த அறியப்படாத, சொல்லப்படாத, தெரியவராத அல்லது பதியப்படாத வெளியில் சஞ்சரிக்கிற அசாதரணமான எழுத்து வகையைச் சேர்ந்ததாக இருப்பதே இதனது முக்கியத்துவம் என்று நாம் சொல்ல வேண்டும். தொழிலாளி வர்க்கத்தவரின் எழுத்தாற்றலுக்கு மு.சந்திரக்குமார் ஒரு சமகால சான்று.
Be the first to rate this book.