ஒன்றுவிடாமல் அனைத்தையும் முழுமையாகத் தெரிந்துகொண்டாகவேண்டும். உச்சம். உச்சத்தைத் தவிர வேறு எங்கும் ஒரு கணம் கூட தங்கக்கூடாது. இந்தக் கனவை நிஜமாக்க லியனார்டோ மேற்கொண்ட பிரயத்தனங்கள் பிரமிக்க வைக்கக்கூடியவை. லியனார்டோவால் மற்றவர்களைவிட விசாலமாகவும் புதுமையாகவும் சிந்திக்கமுடிந்தது. ஒரே மாதிரியான ஓவியங்கள், ஒரே மாதிரியான சிந்தனை, ஒரே மாதிரியான வாழ்க்கை நிலை என்று ஓர் அட்டைப் பெட்டிக்குள் சுருண்ட கிடக்க முடியவில்லை அவரால். ஆகவேதான், ஒரே சமயத்தில் ஓவியராகவும் தொழில்நுட்ப வல்லுனராகவும் சிற்பக் கலைஞராகவும் விஞ்ஞானியாகவும் கண்டுபிடிப்பாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் அவரால் இருக்க முடிந்தது. கால் பதித்த ஒவ்வொரு துறையிலும் உச்சத்தைத் தொட முடிந்தது.
Be the first to rate this book.