உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய் என்றார் புத்தர். இவர்களின் கருத்துகளைத்தான் டால்ஸ்டாய் தன் கதைகளில் வலியுறுத்தி உள்ளார்.தான் கற்றறிந்த, கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றார் அவர். அவர் வாழ்க்கை முள்பாதையாகத்தானிருந்தது. ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார்.
டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர். ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப் பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள்.
5 MUST READ
Ravibala N 13-11-2024 04:15 pm