அக்டோபர் புரட்சியின் விளைவுகளில் ஒன்றான சோவியத் அரசு வீழ்ந்து பட்டது என்பது குறித்தான தெளிவான ஓர்மையுடன் உலகமெங்கும் இன்று சோஷலிச சக்திகள் எதிர்கொண்டு வரும் புதிய சூழல்களையும் நெருக்கடிகளையும் முன்னிறுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது இந்நூலின் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.
மாபெரும் ரஷ்யப் புரட்சியின் தலைவரான விளாதீமிர் லெனினது வாழ்க்கைக் காலத்தையும் அக்டோபர் புரட்சியின் வரலாற்றுச் சூழலையும் இந்நூல் தழுவி நிற்கிறது என்ற போதிலும்,இன்றைய சூழல்களுக்கு ஏற்ப அன்றைய நெருக்கடிகளைத் தகவமைத்து வழங்கும் பணியினை இந்நூலின் ஆசிரியர் மிக அற்புதமாக மேற்கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார். ரஷ்யப் புரட்சியும் லெனினும் அக்காலத்தில் சந்தித்த சில முக்கியமான நெருக்கடிகளைக் குறிப்பாக அடையாளப்படுத்தி, அவற்றைத் தனித்து எடுத்துக் கோட்பாட்டுத் தளத்தில் ஆசிரியர் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
நூலின் ஆசிரியரான தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து மார்க்சியராக உருவாகியவர். பள்ளிப் பருவத்திலேயே முற்போக்கு எழுத்தாளர்களுடன் கவிதை அரங்கங்களில் பங்குகொண்டு உரத்த குரலில் மயகோவ்ஸ்கியின் கவிதைகளை வாசித்த அனுபவங்களை இன்றும் அவர் நினைவு கூர்கிறார். தாரிக் அலியின் குடும்பம் இங்கிலாந்து நாட்டுக்குக் குடிபெயர்ந்தபோது அவர் அங்கு ஒரு பிரிட்டிஷ் மார்க்சியர் ஆனார்.பிரிட்டிஷ் இடதுசாரி அரசியலில் நேரடிப் பங்கேற்பு கொண்டவராகவும் மத்தியக் கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய அரசியல்களில் அக்கறை கொண்டவராகவும் அவர் பரிணமித்தார். இரு அடிப்படை வாதங்களின் மோதல் என்ற அவரது நூல் இஸ்லாமியருக்கு எதிரான மேற்கத்தியப் பேரரசுகளின் சமீபத்திய ஆக்கிரமிப்புகளைத் தோலுரித்துக் காட்டும் நூல். லண்டனில் இருந்து வெளியாகும் நியூ லெஃப்ட் ரிவ்யூ பத்திரிக்கையின் நீண்ட கால ஆசிரியர் குழு உறுப்பினர்களில் தாரிக் அலியும் ஒருவர். நாடகம், திரைப்படம், நாவல் மற்றும் கவிதை இலக்கியங்களில் தாரிக் அலி தனது கனதியான பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
குறைந்தபட்சம் நான்கு பிரச்சினைகளை இந்நூலில் தாரிக்அலி எடுத்துப் பேசியுள்ளார்.
முதல் பிரச்சினை:
பயங்கரவாதம்,வெகுமக்களியம்,அராஜகம் ஆகியவற்றிலிருந்து ரஷ்யாவில் லெனினியம் உருவான கதை.
இரண்டாவது பிரச்சினை:
நூலில் பேசப்படும் அடுத்த பிரச்சினை ரஷ்யாவில் 1917 அக்டோபருக்கு முந்திய மாதங்களில் சோசலிசப் புரட்சி எனும் வேலைத்திட்டம் உருவான வரலாற்றை நோக்கியது.
மூன்றாவது பிரச்சினை:
அக்டோபர் புரட்சியின் மற்றும் லெனினியத்தின் சர்வதேசப் பரிமாணங்கள் குறித்து இப்பகுதி பேசுகிறது.லெனினியமும் மூன்றாம் உலக நாடுகளும் சந்திக்கும் இடங்களையும் இப்பகுதி சுட்டிக் காட்டுகிறது.ஏகாதிபத்தியம்,சர்வதேசியம்,மூன்றாம் அகிலம்,உலகப் போர்கள்,தேசிய விடுதலை இலக்கியம் ஆகியவற்றை நோக்கிய புதிய வரையறைகளையும் இப்பகுதி வழங்குகின்றது.
நான்காவது பிரச்சினை:
அக்டோபர் புரட்சிக்கு முந்தியும் பிந்தியுமான ஆண்டுகளில் ரஷ்ய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியில் நேரடி அரசியல் செயல்பாட்டில்
ஈடுபட்ட பெரும் எண்ணிக்கையிலான பெண்களைப் பற்றியதாக தாரிக் அலியின் நூலின் இப்பகுதி அமைந்துள்ளது.
5 மார்க்சிய செவ்வியல் நூல் வரிசை: 2
லெனின் சந்தித்த நெருக்கடிகள் பயங்கரவாதம்,போர்,பேரரசு,காதல்,புரச்சி மார்க்சிய செவ்வியல் நூல் வரிசை: 1 எழுத்தாளர்: தாரிக் அலி தமிழில்: க.பூரணச்சந்திரன் பதிப்பகம்: நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் விலை: 600 பக்கங்கள்: 420 எது கடிணமான பணியோ அதுவே நாம் செய்து முடிக்க வேண்டிய முதல் பணி - தோழர் மாவோ இந்த புத்தகத்தை படித்தமுடித்தவுடன் எனக்கு முதலில் இந்த மேற்க்கோல் தான் நினைவுக்கு வந்தது.குறிப்பாக இடதுசாரி அரசியல் இயக்கங்கள் தன்னை சுயவிமர்சணம் செய்துகொள்ள சரியான நூல். முதலாளித்துவம் தன்கையில் இருக்கும் தொழில்நுட்ப்ப கருவிகள் கொண்டு மக்களின் அறிவு வளர்ச்சியை முடக்கியிருக்கும் இந்த காலகட்டத்தில்.இந்த நூல் பல வேலை திட்டங்களை நம்மிடையே கொண்டுவந்து சேர்த்துள்ளது. முன்னுரை வாசிக்கும் போது நாம் அந்த காலகட்டத்தில் நுழைந்து விடுவோம்.அதன் பின் நாம் ஒர் பார்வையாளராக அனைத்தையும் கண்டு நேரடி அனுபவத்தை எடுக்க முடியும்.நூல் ஆசிரியார் தாரிக் அலியின் உணர்வை தமிழில் நம்மிடம் கடத்தியிருக்கிறார் தோழர் க.பூரணச்சந்திரன்.லெனின் வாழ்க்கை வரலாற்றை எழுதமால் அக்டோபர் புரச்சியின் விளைவுகளில் ஒன்றான சோவியத் அரசு வீழ்த்தபட்டது பற்றி உலக்கெங்கிலும் இன்று சோசலிச சக்திகள் எதிர்கொண்டு வரும் புதிய சூழல்களையும் நெருக்கடிகளையும் முதன்மைபடுத்தி எழுதியிருப்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு.ரஷ்யப் புரட்சியில் லெனின் சந்நித்த முக்கிய நெருக்கடிகளை வரலாற்று ஆய்வோடு எழுதியுள்ளார். நான்கு தலைப்பில் தாரிக் அலி புரியவைத்துள்ளார். முதல் பிரச்சனைகள் பயங்கரவாத,வெகுமக்களியம்,அராஐகம் ஆகியவற்றிலிருந்து ரஷ்யாவில் லெனியம் உருவான கதை.கொடூரமான அடக்குமுறைகளையும் அதிகார அரசியல்,சமூக சூழல்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ரஷ்யா கொண்டிருந்தது.இதில் உழவர்கள் எழுச்சி முக்கியமானவை,டிசம்பரிஸ்டுகள் உணர்ச்சியற்ற நிலை,அச்சமூகம் செயலற்ற தன்மை,திக்கற்ற எதிர்ப்பின் உளவியல்,நம்பிக்கையின் வறட்சியில் எழுந்த ஆன்மீகம்,அராஐகம் இவை அனைத்தையும் தாரிக் அலி பயங்கரவாதங்களோடு ஒப்பிடுகிறார். மார்க்சியத்திலிருந்து நேராக லெனியம் தோன்றியது என்ற வழக்கமான விளக்கதிலிருந்து தாரிக் அலியின் அணுகுமுறை வேறுபடுகிறது.இதில் “செர்னஷேவ்ஸ்கியின்” செய்ய வேண்டியது என்ன என்ற அரசியல் நாவலை தனது வழிகாட்டியாக கொண்டிருந்தார் இங்கிருந்துதான் லெனியம் தொடங்குகிறது. இரண்டாவது பிரச்சனைகள் 1917 ரஸ்யாவில் அக்டோபருக்கு முந்திய மாதங்களில் சோசலிசப் புரட்சி எனும் வேலைத்திட்டம் உருவான வரலாற்றை நோக்கியது.எல்லையில் நடந்த கொண்டிருந்த ஏகாதிபத்தியப் பேரரசுகளுக்கு இடையிலான யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக உருமாற்றுவோம் என்று ரஸ்ய சமூக சனாநாயக தொழிலாளர் கட்சி அறிவுத்தது.லெனின் புரட்சிக்கான செயல் திட்டம் தீர்மானகரமானது.கட்சி தலைமையில் தனிமனிதரின் பாத்திரம் குறித்து இந்நிலையில் தாரிக் அலி கவனப்படுகிறார்.படிப்படியான புரட்சி என்ற கோட்பாடு புரட்சியை மந்தப்படுத்தவதற்கு பயண்படுத்தப்படக் கூடாது என்பதை லெனின் சுட்டிக்காட்டினார்.லெனினியம் ஜரோப்பிய மையவாத்த்தை கடந்த வந்த வரலாற்றுத் தருணமர அது. மூன்றாவது பிரச்சினைகள். அக்டோபர் புரட்சியின் மற்றும் லெனியத்தின் சர்வதேசப் பரிமாணங்கள் குறித்து இப்பகுதி பேசுகிறது.ஏகாதிபத்தியம்,சர்வதேசியம்,மூன்றாம் அகிலம்,உலகப் போர்கள்,தேசிய விடுதலை இயக்கம் ஆகியவற்றை நோக்கிய புதிய வரையறைகளையும் இப்பகுதி வழங்குகின்றன. மேற்க்கு ஜரோப்பாவின் முன்னணியில் இடம்பெற்றிருந்த தொழிலாளர் கட்சிகளில் அசல் லெனினது போராட்ட வியூகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.ரஸ்யப் புரட்சிக்கு மேற்கு நாடுகளில் ஆதரவை எதிர்பார்த்து அதனைப் பெறமுடியாமல் போன லெனின்.லெனியம் என்ற கோட்பாட்டு உருவாக்கத்தில் மூன்றாம் உலக நாடுகளின் பார்வையைத் தாரிக் அலி சிறப்பானதொரு திருப்பு முனையாகக் காணுகிறார். நான்கவது பிரச்சனைகள் அக்டோபர் புரட்சிக்கு முந்தியும் பிந்தியுமான ஆண்டுகளில் ரஸ்ய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியில் நேரடி அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்ட,பெரும் எண்ணிக்கையிலான பெண்களைப் பற்றியதாகத் தாரிக் அலியின் நூலின் இப்பகுதி அமைந்துள்ளது.சமதர்ம இயக்கமே பெண்கள் விடுதலையைச் சமகால அரசியல் சொல்லாடல்களுக்கு தீவிர விவாத்ததிற்கு கொணர்ந்த இயக்கம் என்றும் அவர் மதிப்பிடுகிறார். “எல்லா விடுதலை இயக்கங்களின் அனுபவத்தில் இருந்து,ஒரு புரட்சியின் வெற்றி அதில் பங்கேற்ற பெண்களின் ஈடுபாட்டின் அளவைப் பொருத்து என்று குறிப்பிடலாம்” பெண்ணியம், காதல் ,கட்சி பணியின் முன்னுரிமைகள் ஆகியவை குறித்த லெனினது நேரடி அனுபவங்கள் இவ்வியலில் விவரிக்கப்பட்டுள்ளன. ஓரு சமுகப் புரட்சி என்பது அத்தனை எளிதான நேர்கோட்டுப் பண்பு கொண்டதுமல்ல.அப்புரட்சியை ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பயிலும் போது,இடையில் கடந்து சென்ற காலங்களின் சிக்கல்களும் கூடுதலாகச் சேர்ந்துவிடும்,இந்த புரிதலோடுதான்,புரட்சி நமக்கு விட்டுச் செல்லும் பாடங்களையும் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். பொதுவுடமையை மையமாக கொண்டு நான் வாசித்த புத்தகத்தில் இதுவரை காணாத லெனின் காதல் வாழ்க்கை,லெனின் மனைவியை பற்றி தகவல்,பெண் பயங்கரவாத அமைப்பு பற்றிய வரலாறு என பல கொட்டிகிடக்கின்றது இந்த புத்தகத்தில்.நான் எழுதியது மிக மிக எளிய அறிமுகம் மட்டுமே நீங்கள் வாசிக்கும் போது இன்னும் பெரிய அனுபவங்களாம் கிடைக்கும். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய ஓன்று ஒரு புரட்சிகர கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கான சிறந்த எடுத்துகாட்டாக “போல்ஷ்விக் கட்சி” நடைமுறை அரசியலில் சுயவிமர்சணத்தோடு இயங்கியிருக்கறது. ஜார் மன்னர்களின் கொடுமையை ஆரம்பகாலம் முதல் மக்கள் சில இடங்களில் எதிர்த்தும்.கிளர்ச்சி செய்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். மார்க்கசியம் வருவதற்கு முன்பே மக்களின் எதிர்புணர்வு கொண்ட தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் சில இடங்களில் தற்காலிக வெற்றியும் பெற்றியிருக்கிறார்கள். விவசாயிகள் தொழிலார்கள் இணைந்து இல்லாமால் உதிரியாக இல்லை என்றாலும் சரியான அரசியல் தலைமை இல்லமால் நடந்திருக்கிறது.இதுபோக ஜெர்மன் பொதுவுடமை கட்சி,பெண்கள் தலைமையிலான குழு,மக்களை அரசியல்படுத்தும் எழுத்தாளர்கள்,செஞ்சேனைபடை,லெனின்,ஸ்டாலின்,கிராம்சி ,டரஸ்கி,கார்க்கி,ரோஸா லக்ஸ்ம்பர்க், இன்னும் எனது வாயில் நுழையாத பெயர்களை கொண்ட போல்ஷ்விக் தோழர்கள் என அனைவரும் ஒரே நேர்கோட்டு திசையில் இல்லமால் கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் தனக்கு சாதகமாக பயண்படுத்தியிருக்கிறார்கள். அப்படிபட்ட மார்க்கசிய லெனிய கண்ணோட்டம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் குறிப்பாக இந்தியவில் தேர்தல் அரசை நம்பி அல்லது நிகழ்கின்ற அரசோடு நட்ப்பு பாராட்டி மக்களுக்கு நன்மை செய்யும் NGOவாக செயல்படுவது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.வளர்ச்சியின் உச்சம் தொட்டுக்கொண்டு இருக்கும் முதலாளித்துவம்.குறிப்பாக கமியூனிஸ்டுகளின் அறிவு களஞ்சியமான மார்க்கசிய லெனிய கோட்ப்பாடுகளை மக்கள் மத்தியில் நீர்த்துபோக செய்து வருகிறது. தனிமனித விருப்பு மகிழ்வுதான் சிறந்த வாழக்கையாக மக்கள் நலம்சார்ந்த அரசியல் புரட்சியெல்லாம் வீன்வேலை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும்பெற்று வருகிறது. அனைவரையும் அரசியல் படுத்தவேண்டிய பணி நம்முடையது அது கடிணமான பணியாகயிருக்கலாம் “எது கடிணமானபணியோ அதுவே நாம் செய்து முடிக்க வேண்டிய முதல் பணி. நன்றி கணேஷ் பாரி 27-07-2021
Ganesh Pari 22-10-2021 09:07 am