புதியதொரு சோஷலிஸ சமுதாயத்தைக் கட்டமைக்கப் பாடுபட்டவர் மாமேதை லெனின். அவரது கல்விச் சிந்தனைகளில் அடங்கியுள்ள மூலதாரக் கல்விக் கோட்பாடுகள் பின்வருவன: கல்வி சமூக அமைப்பு முழுமையின் பிரிக்க முடியாத ஓர் இணை கூறு. நான்கு இயல்களில் இந்நூல் லெனினது கல்விச் சிந்தனைகளின் விரிந்த உள்ளடக்கத்தை விவரிக்கிறது. ‘சமூக அமைப்பும் கல்வியும்’ , ‘சமூக வர்க்கங்களும் கல்வியும்’, ‘உற்பத்தி உழைப்பும் பல்தொழில்நுட்பக் கல்வியும்’, ‘கல்வியும் பண்பாடும்’ ஆகியவை அந்த இயல்களாகும்.சோஷலிஸப் புரட்சிக்கு முன்னைய ருஷியாவில் 75 சதமானோர் கல்வியறிவு அற்றவர்கள். ஆனால் லெனின் தலைமையில், அவரது நெறியாள்கையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சோவியத் அரசு பதினைந்தாண்டுகளில் கட்டாய ஆரம்பக்கல்வியைச் சாத்தியமாக்கி நிறைவேற்றி முடித்தது. “சோவியத் ஒன்றியத்தைப் போல் கல்விக்கு அதி முக்கியத்துவம் அளித்த நாடு எதுவும் உலகில் இல்லை. நாகரிக வரலாற்றிலே கல்வி பெறுவதில் உள்ள சகல பொருளாதாரத் தடைகளையும் அகற்றிய நாடு இதுவாகும்.’’ என்று தரவுகளுடன் நிரூபிக்கிறார் ஆசிரியர்.
Be the first to rate this book.