ஒரு மாபெரும் தலைவராக விளங்கிய ஒரு மாமனிதர் பற்றிய ஈடு இணையற்ற நினைவுகளும், ஈடு செய்யயிலாத உணர்வுகளும் எங்களுடைய மனதில் ஒரு மின்னல் ஒளி போல் தோன்றிய தருணம். அது என்னவெனில் அவரைப் பற்றிய ஆற்றொனா துயரமிக்க நேரம்தான். லெனினின் தனிப்பட்ட குணங்கள் அவரை ஒரு மாமனிதராகவும், ஒரு தலைசிறந்த தலைவராகவும் எங்கள் மனதில் பதிந்து விட்டது.
மார்க்ஸின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால், “கம்யூன் போராளிகள் எப்போதும் புகழ்பெற்ற சொத்தாக உழைக்கும் வர்க்கத்தினரின் இதயங்களில் குடியிருந்து வருகின்றனர்” இது லெனினுக்கும் பொருந்தும். உழைப்பாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரும் சொத்துடைமையாளர்களால் பாதிக்கப்பட்டனர். பழமைவாத பொய்யர்கள் போலியான நடிப்பு கொண்ட பூர்ஷ்வாக்களைப் பற்றி அறியாதவர்கள். வாழ்வினில் எது உண்மை, எது பொய் என்ற வித்தியாசத்தினையும், தற்பெருமை கொள்ளா தவர்களுக்கும், தங்களது பெருமைகளைத் தாங்களே பீற்றிக் கொள்பவர்களுக்கிடையேயும் – மற்றும் அன்பினை தங்கள் செயல்கள் மூலம் வெளிப்படுத்துபவர்களுக்கும் தங்களை சமூகத்தில் செல்வாக்கினை உயர்த்திக் காட்டித் தற்பெருமை பேசுபவர்களுக்கிடையேயான வித்தியாசத்தினை மிகவும் நுட்பமான உள்ளுணர்வின் பேரில் புரிந்து கொள்பவர்களாகத்தான் உழைக்கும் வர்க்கத்தினர் இருக்கின்றனர்.
Be the first to rate this book.