எத்தனையோ தேசங்களில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் ரஷ்யாவில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட புரட்சிக்கு ஈடாக இன்னொன்றைச் சொல்லமுடியாது. சரித்திரம் காணாத மகத்தான ஆட்சி மாற்றம் அது.
லெனினின் வருகைக்கு முன்புவரை ரஷ்யாவில் ஜார் அரசர் வைத்ததுதான் சட்டம்.
முதலாளிகள் தொழிலாளர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கிவந்தார்கள். எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர் அல்லது அடித்துக் கொல்லப்பட்டனர்.\nலெனின் ஏழை தொழிலாளர்களை, விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் படையை உருவாக்கினார். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே லெனினின் கனவு சாத்தியமானது. லெனின் தலைமையில் புதிய சோவியத் ரஷ்யா உதயமானது.
அசாத்தியமான துணிச்சல் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம். லெனினின் வாழ்க்கை உணர்த்தும் முக்கியப் பாடம் இது.
Be the first to rate this book.