அகத்தில் உள்ள தேசம் புறத்தில் உள்ள தேசத்தோடு நடத்தும் ஊடாடலும் உரையாடலும்தான் இன்பாவின் கவிதைகள். பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்களே சேர்ந்து உருவாக்கிய சிங்கப்பூர் என்ற தேசத்தின் எல்லைகளும் வரையறைகளும் பெருமூச்சுகளும் சின்னங்களும் இப்படித்தான் இன்பாவின் கவிதைகளில் இயல்பாகத்தோன்றிவிடுகின்றன. ஒரு குட்டி தேசத்தில், அங்குள்ஈரச்சந்தையில் சந்திக்கும் பல்லுயிர்களையும் தன் பெரும் கூடையில் சேகரித்துக் கொண்டே, தேசிய கவியாக உருவாவது எளிதுபோல. பாரதிதாசன் மரபில் கிளைத்து ஒருவர் நவீன கவிதையின் புதிய சாத்தியங்களுக்குத் தகவமைக்க முடியும் என்ற நம்பிக்கையான செய்தியை இன்பாவின் கவிதைகள் எனக்குத் தந்திருக்கின்றன.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்
Be the first to rate this book.