சிலியின் ஜனநாயகப் பூர்வமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்த சோசலிச அரசு, சிஐஏ சதியாலும் உள்நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கவிழ்க்கப்பட்டு சல்வடார் அலெண்டே படுகொலையான பின், சிலியில் இருந்து தப்பிச் சென்ற இஸபெல் அலெண்டே தன்னோடு எடுத்துச் சென்ற சொற்பமான உடமைகளில் ஒன்றாக இருந்த நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’.
2009 ஆம் ஆண்டு அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு வெனிசுலாவின் அதிபர் ஹுகோ சாவேஸ் பரிசளித்த நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’
லத்தீன் அமெரிக்க வரலாறு, அரசியல் போராட்டங்கள் அதன் இலக்கியங்கள் என ஒரு வண்ணமிகு கண்டத்தை ஒரே நூலின் மூலம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கான நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’.
உலகம் முழுவதும் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி, முதன்முறையாக ஒரு இந்திய மொழியில் - தமிழில் வரும் நூல் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’.
Be the first to rate this book.