லதிஃபே ஹனிம் இல்லாமல் ஆட்டாடூர்க் கெமால் பாஷாவின் வாழ்க்கை வரலாற்றை எழுத முடியாது. கெமால் பாஷா இல்லாமல் துருக்கியின் வரலாற்றை எழுத முடியாது. இது லதிஃபேவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல. இது ஆட்டாடூர்க்கின் வாழ்க்கை வரலாறும், துருக்கியின் அரசியல், சமூக, வரலாறுங்கூட.
லதிஃபே, ஆட்டாடூர்க்குடன் வாழ்ந்தது இரண்டரை வருடங்களே. இருவரும் ஒருமித்த சிந்தனை கொண்டவர்கள். பெண்ணுரிமைகளை ஏற்றுக்கொண்டவர்கள். எதிர்காலத் துருக்கியப் பெண்ணின் முன்மாதிரியாக முஸ்தஃபா கெமாலால் அடையாளங்காட்டப்பட்டவர் லதிஃபே. இருப்பினும் இருவரும் ஏன் குறுகிய காலத்தில் பிரிந்தனர்?
அவரைப்பற்றி ஏன் அவதூறுகள் பரப்பப்பட்டன? இவற்றுக் கெல்லாம் விடைகாண முயற்சிக்கிறது இந்நூல்.
இறுதி மூச்சுவரை ஆட்டாடூர்க் மீது கொண்ட காதலை இதயத்தில் பூட்டிவைத்திருந்த லதிஃபேவின் துன்பியல் காதல் கதை.
Be the first to rate this book.