தன் வாழ்நாள் முழுவதையும் உழைக்கும் பெண்களுக்காக அர்ப்பணித்த கம்யூனிஸ்ட் போராளி கிளாரா ஜெட்கின் 1857ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி ஜெர்மன் நாட்டின் சாக்சனி மாநிலத்தில் உள்ள மிட்டெல்சாசென் மாவட்டத்தின் வைடொராவ் கிராமத்தில் பிறந்தார்.
கிளாராவின் வாழ்க்கை என்பது உலகப் பெண்கள் இயக்க வரலாற்றோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக அமைந்திருந்தது. இதன் காரணமாகவே ‘மகளிர் விடுதலை இயக்கங்கள்’ பற்றி மார்க்சிய அடிப்படையில் வரலாற்று பொருள் முதல்வாத நோக்கிலான சிறப்பான கட்டுரைகளை அவர் நமக்களித்துச் சென்றுள்ளார். மார்க்சிய மூலவர்களில் ஒருவரான எங்கல்சோடும், மார்க்சிய தத்துவத்தை நடைமுறைப்படுத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசிற்கு தலைமையேற்ற லெனினோடும் இணைந்து பணியாற்றிய சிறப்புக்குரியவர் என்பதோடு மார்க்சிய தத்துவம் பெண் விடுதலைக்குமானது என்பதை உரத்து முழங்கி அதை நடைமுறைப் படுத்திய பெருமைக்கும் உரியவர் கிளாரா.
Be the first to rate this book.