ஆப்கன் பெண்களின் துயர வாழ்வு வாய்மொழிப் பாடல்களாகவும் கவிதைகளாகவும் பதிவாகிக் கிடக்கிறது. அதுதான் லண்டாய். மிகத் தொன்மையான இலக்கியம். உரிமைகளை நிலைநாட்டப் போராடும் ஆப்கன் பெண்களுக்கான கைவாள். திட்டமிட்டுப் பெண்களைச் சமயலைறக்குள் அடைத்தாலும் சமூக மாற்றத்துக்கான கவிதைகளை அவர்கள் சத்தமின்றி சமைத்துக்கொண்டேதானிருக்கிறார்கள். ஆப்கன் பெண்களின் வாய்மொழிக் கவிதைகள் முதல்முறையாகத் தமிழுக்கு வந்திருக்கின்றன.
Be the first to rate this book.